Header Logo

செய்திகள்
மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

Mar 31, 2026 - 06:35 PM -

0

மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

1999ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது இடம்பெற்ற நபர் ஒருவரின் கொலைச் சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, உயர் நீதிமன்றம் இன்று (31) ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.


மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் குறித்த தீர்ப்பிற்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணை செய்த பின்னரே உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

 

நீதியரசர்களான பிரியந்த பெர்னாண்டோ மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோரின் உடன்பாட்டுடன், உயர் நீதிமன்ற நீதியரசர் மஹிந்த சமயவர்தனவினால் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.


1999ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக, 2015ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனுக்கு எதிராக கண்டி மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.


அந்தக் குற்றப்பத்திரிகையை ரத்து செய்து 'ரிட்'  கட்டளை ஒன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரணை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் திகதி தீர்ப்பொன்றை வழங்கி, ஜனக பண்டார தென்னகோனுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ரத்து செய்து கட்டளை பிறப்பித்தது.


மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பிற்கு எதிராக சட்டமா அதிபரால் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது. சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு பிழையானது என உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தார்.


அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இன்று தனது தீர்ப்பை அறிவித்தது. சட்டமா அதிபரின் குற்றப்பத்திரிகையை ரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறானது என நீதியரசர்கள் குழாம் சுட்டிக்காட்டியது.


அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்வதாகவும், சட்டமா அதிபரின் மேன்முறையீட்டை கட்டணங்களுடன்  ஏற்றுக்கொள்வதாகவும் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம்!

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம்!

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம்!

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம்!

சட்டமா அதிபரின் தலையீட்டுக்கு நீதிமன்றில் எதிர்ப்பு!

சட்டமா அதிபரின் தலையீட்டுக்கு நீதிமன்றில் எதிர்ப்பு!

தீர்த்தக்குட பவனி கோலாகலம்!

தீர்த்தக்குட பவனி கோலாகலம்!

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

அந்தப் பாராளுமன்ற உறுப்பினரை ஒரு மனநோயாளியாகவே பார்க்கிறோம்!

அந்தப் பாராளுமன்ற உறுப்பினரை ஒரு மனநோயாளியாகவே பார்க்கிறோம்!

மீனவர் பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

மீனவர் பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

title