Header Logo

செய்திகள்
நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை

Mar 31, 2026 - 10:10 PM -

0

நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பெரும்பாலான பிரதான ஆறுகளின் நீர்மட்டம் தற்போது 75% என்ற அளவில் காணப்படுவதாக அத்திணைக்களத்தின் (நீரியல் மற்றும் இடர் மேலாண்மை) பணிப்பாளர் எல்.எஸ்.சூரியபண்டார தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாக இந்த சிறுபோகப் பயிர்ச்செய்கைக்கான நீரை வழங்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

"பெரும்பாலான பிரதான ஆறுகளின் நீர்மட்டம் தற்போது குறைவடைந்து வருகின்றது. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள 73 நீர்த்தேக்கங்களில் பெரும்பாலானவற்றின் நீர்மட்டம் சராசரியாக 75% இற்கும் அதிகமாகவே உள்ளது. எனவே, இந்த போகத்திற்கான நீரை வழங்க முடியும். குடிநீர் தேவைக்காக ஆறுகளில் இருந்து நீர் பெற்றுக்கொள்ளப்படும் இடங்களில் உவர் நீர் உட்புகும் அபாயம் காணப்படலாம். குறிப்பாக நில்வலா, களனி மற்றும் களு ஆகிய ஆறுகளில் இந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் நீரை மிகவும் கவனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம்!

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம்!

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம்!

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம்!

சட்டமா அதிபரின் தலையீட்டுக்கு நீதிமன்றில் எதிர்ப்பு!

சட்டமா அதிபரின் தலையீட்டுக்கு நீதிமன்றில் எதிர்ப்பு!

தீர்த்தக்குட பவனி கோலாகலம்!

தீர்த்தக்குட பவனி கோலாகலம்!

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

அந்தப் பாராளுமன்ற உறுப்பினரை ஒரு மனநோயாளியாகவே பார்க்கிறோம்!

அந்தப் பாராளுமன்ற உறுப்பினரை ஒரு மனநோயாளியாகவே பார்க்கிறோம்!

மீனவர் பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

மீனவர் பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

title