Header Logo

செய்திகள்
VAT வரிப்பட்டியலை நடைமுறைப்படுத்தல் ஒத்திவைப்பு

Apr 1, 2026 - 06:56 AM -

0

VAT வரிப்பட்டியலை நடைமுறைப்படுத்தல் ஒத்திவைப்பு

தரப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் (VAT) வரிப்பட்டியல் முறையை நடைமுறைப்படுத்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


குறிப்பிட்ட இந்த வரிப்பட்டியல் முறையை நடைமுறைப்படுத்தும் திகதி 2026 ஜூலை 1 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கான திருத்தம் விரைவில் வெளியிடப்படும் என ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


இந்தச் சீர்திருத்தம் ஆரம்பத்தில் 2026 ஜனவரி 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவிருந்தது. எவ்வாறாயினும், நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் பெறுமதி சேர் வரிக்காகப் பதிவு செய்துள்ள வணிகங்களின் கோரிக்கைகளைக் கருத்திற் கொண்டு, அதன் அமலாக்கத் திகதி முதலில் 2026 ஏப்ரல் 1 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.


நீண்டகாலமாக நிலவும் முரண்பாடுகளை நீக்குதல், வரி இணக்கப்பாட்டை வலுப்படுத்துதல் மற்றும் நாட்டின் பரந்த டிஜிட்டல் வரிவிதிப்பு சாலை வரைபடத்திற்கு ஆதரவளித்தல் ஆகியவற்றை புதிய முறை நோக்கமாகக் கொண்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
பங்குனி உத்தர இரதோற்சவம்!

பங்குனி உத்தர இரதோற்சவம்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அகழ்வு

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அகழ்வு

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம்!

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம்!

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம்!

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம்!

சட்டமா அதிபரின் தலையீட்டுக்கு நீதிமன்றில் எதிர்ப்பு!

சட்டமா அதிபரின் தலையீட்டுக்கு நீதிமன்றில் எதிர்ப்பு!

தீர்த்தக்குட பவனி கோலாகலம்!

தீர்த்தக்குட பவனி கோலாகலம்!

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

title