Header Logo
Mogo Academy

விளையாட்டு
முதல் வெற்றியை பதிவு செய்தது டெல்லி கேபிட்டல்ஸ்!

Apr 2, 2026 - 06:52 AM -

0

முதல் வெற்றியை பதிவு செய்தது டெல்லி கேபிட்டல்ஸ்!
Mobitel inner

2026 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று (01) நடைபெற்ற 5 ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. 

முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ அணி 18.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ஓட்டங்களை பெற்றது. 

லக்னோ அணி சார்பாக அதிகபட்சமாக அப்துல் சமது 36 ஓட்டங்களை பெற்றார். 

பந்து வீச்சில் டெல்லி சார்பில் லுங்கி நிகிடி மற்றும் நடராஜன் தலா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 1 விக்கெட் வீழ்த்தினர். 

இந்நிலையில் 142 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 17.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்களை பெற்றது. 

டெல்லி அணி சார்பாக அதிகபட்சமாக சமீர் ரிஸ்வி ஆட்டமிழக்கமால் 70 ஓட்டங்களை பெற்றார். 

பந்து வீச்சில் லக்னோ சார்பில் ப்ரின்ஸ் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

குறித்த டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் அறிமுகமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara