Header Logo
Mogo Academy

விளையாட்டு
14 ஆண்டுகளின் பின் கொல்கத்தாவுக்கு அதிர்ச்சி

Apr 3, 2026 - 07:13 AM -

0

14 ஆண்டுகளின் பின் கொல்கத்தாவுக்கு அதிர்ச்சி
Mobitel inner

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் நேற்றைய (2) போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 65 ஓட்டங்களால் சன்ரைஸஸ் ஐதரபாத் ஆகிய அணி வெற்றிக்கொண்டுள்ளது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பாடிய சன்ரைஸஸ் ஐதரபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 226 ஓட்டங்களைப் பெற்றது. 

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஹென்ரிச் க்ளாசன் 52 ஓட்டங்களையும், அபிஷேக் சர்மா 48 ஓட்டங்களையும், ட்ராவிஸ் ​ஹெட் 46 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர். 

கொல்கத்தா அணி சார்பில் பந்துவீச்சில் முஸரபானி 4 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தினார். 

இந்நிலையில் 227 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 161 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது. 

கொல்கத்தா அணி சார்பில் ரகுவன்சி அதிகபட்சமாக 52 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். 

நடப்பு ஐ.பி.எல் தொடரில் இடம்பெற்ற மும்பை மற்றும் சன்ரைஸஸ் அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் கொல்கத்தா அணி தோல்வியடைந்துள்ளது. 

கடந்த 14 ஆண்டுகளில் ஒரு ஐ.பி.எல். சீசனின் முதல் இரண்டு போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோற்பது இதுவே முதல் முறை ஆகும். 

எவ்வாறாயினும் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்த 2012 ஆம் ஆண்டு சீசனில் தான் கொல்கத்தா அணி முதல் முறையாக ஐ.பி.எல். பட்டத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara