Header Logo

செய்திகள்
மட்டக்குளி கொலை தொடர்பில் 9 சந்தேகநபர்கள் கைது

Apr 3, 2026 - 08:46 AM -

0

மட்டக்குளி கொலை தொடர்பில் 9 சந்தேகநபர்கள் கைது

மட்டக்குளி - கெமுனுபுர பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 31 ஆம் திகதி மட்டக்குளி - கெமுனுபுர பகுதியில் ஆயுதம் ஒன்றினால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டார். 

இருதரப்பினரிடையே ஏற்பட்ட முரண்பாட்டை தொடர்ந்து குறித்த நபரின் வீட்டிற்கு சென்ற சிலர் கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளனர். 

சம்பவத்தில் பலத்த காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

மட்டக்குளி பகுதியை சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்தார். 

சம்பவம் தொடர்பில் மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் குறித்த சந்தேகநபர்களை நேற்று (2) கைது செய்துள்ளனர். 

கைதானவர்கள் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 19 முதல் 40 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அவர்களை இன்றைய தினம் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

title