Apr 3, 2026 - 11:22 AM -
0
தம்பலகாமம் முள்ளிப்பொத்தானை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி எரிபொருளை கையிருப்பில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 2,045 லீற்றர் டீசலை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 41 மற்றும் 61 வயதுடைய திருகோணமலை மற்றும் தம்பலகாமம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
