Header Logo

செய்திகள்
கமநல சேவை நிலையங்கள் விடுமுறை நாட்களிலும் திறப்பு

Apr 3, 2026 - 12:09 PM -

0

கமநல சேவை நிலையங்கள் விடுமுறை நாட்களிலும் திறப்பு

சிறு போக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு உரங்களை விநியோகிப்பதற்காக, கமநல சேவை நிலையங்கள் விடுமுறை நாட்களிலும் திறந்திருக்கும் என விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக அந்தத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து விடுமுறை நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள கமநல சேவை நிலையங்களைத் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உர விநியோகத்தில் ஏற்படக்கூடிய தடைகள் மற்றும் பல்வேறு தரப்பினர் உரங்களை சேமித்து வைக்க முயற்சிப்பதைக் கருத்திற்கொண்டு, நெற்செய்கைக்குத் தேவையான உரங்களை அரசாங்க கமநல சேவை நிலையங்கள் ஊடாக மாத்திரம் விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, யல பருவச் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தற்போது விவசாய சேவை நிலையங்கள் ஊடாக உர விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, 50 கிலோ கிராம் யூரியா உர மூடை ஒன்று 9,900 - 10,200 ரூபா இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

title