Header Logo

செய்திகள்
தர்மபுரம் பகுதியில் கோர விபத்து - இரு இளைஞர்கள் பலி

Apr 4, 2026 - 08:18 AM -

0

தர்மபுரம் பகுதியில் கோர விபத்து -  இரு இளைஞர்கள் பலி

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் - முல்லைத்தீவு (A35) வீதியில், தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. 

நேற்று (03) இரவு 10 ஆம் வீதி வழியாகச் சென்றுகொண்டிருந்த மோட்டார் கிரேடர் (Motor Grader) வாகனத்துடன், பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

உயிரிழந்தவர்கள் 19 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்கள் என என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

உயிரிழந்த இளைஞர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. 

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

--

MOST READ

காணொளி
மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்!

குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்!

நெல்லுக்கான உத்தரவாத விலையை உடன் வழங்குங்கள் - இளையதம்பி சிறிநாத்

நெல்லுக்கான உத்தரவாத விலையை உடன் வழங்குங்கள் - இளையதம்பி சிறிநாத்

செம்மணி இன்று 07 என்புக் கூடுகள் அகழ்தெடுக்கப்பட்டுள்ளன!

செம்மணி இன்று 07 என்புக் கூடுகள் அகழ்தெடுக்கப்பட்டுள்ளன!

எதிர்க்கட்சியினர் அச்சமடைந்துள்ளனர்!

எதிர்க்கட்சியினர் அச்சமடைந்துள்ளனர்!

ஏற்றுமதியாளர்களை முடக்கி நிலையான அபிவிருத்தியா?

ஏற்றுமதியாளர்களை முடக்கி நிலையான அபிவிருத்தியா?

ஜீவந்த பீரிஸின் கருத்துக்கு குழு ஆதரவு!

ஜீவந்த பீரிஸின் கருத்துக்கு குழு ஆதரவு!

மீன்பிடித்துறை அமைச்சரால், கொந்தளித்த அர்ச்சுனா

மீன்பிடித்துறை அமைச்சரால், கொந்தளித்த அர்ச்சுனா

title