Header Logo

செய்திகள்
சியோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு ஆராதனை!

Apr 5, 2026 - 03:52 PM -

0

சியோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு ஆராதனை!

மட்டக்களப்பில் சீயோன் தேவாலயத்தில் பலத்த பாதுக்கப்புக்கு மத்தியில் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவு கூரும் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனை இன்று (05) இடம்பெற்றது. 

கடந்த 2019 ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அங்கு 30 பேர் உயிரிழந்தனர். 

இந்த சம்பவத்தில் மேலும் 80 பேர் படுகாயமடைந்தனர். 

குறித்த தற்கொலை குண்டுதாக்குதல் இடம்பெற்று 6 வருடம் முடிந்தும் நீதி கிடைக்காத நிலையில் இன்று உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனை இராணுவம் மற்றும் பொலிஸாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தேவாலய போதகர் மகேசன் ரொசான் தலைமையில் இடம்பெற்றது. 

இதில் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர். 

இதேவேளை மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இந்த விசேட ஆராதனையிட்டு பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விமானப்படையினர் தேவாலய வளாகங்களில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருவது குறிப்பிடதக்கது.

--

Comments
0

MOST READ

காணொளி
தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

title