Header Logo
Mogo Academy

விளையாட்டு
டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!

Apr 6, 2026 - 09:39 AM -

0

டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!
Mobitel inner

2026 ஐ.பி.எல். தொடரில் ஆர்.சி.பி. அணியின் விராட் கோலி நல்ல ஃபார்மில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நேற்று (05) இடம்பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 18 பந்துகளில் 28 ஓட்டங்களை பெற்றார். இதன் மூலம் அவர் டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்து அசத்தினார். 

அதன்படி டி20 கிரிக்கெட்டில் ஒரே அணிக்கு எதிராக அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார். இவர் தற்போது சி.எஸ்.கே. அணிக்கு எதிராக 1,188 ஓட்டங்களை பெற்றுள்ளார். 

முன்னதாக ரோகித் சர்மா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 1,161 ஓட்டங்களை பெற்று இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். இதே பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 1,159 ஓட்டங்களை அடித்து விராட் கோலி மூன்றாவது இடத்திலும் இருக்கிறார். 

நேற்று இடம்பெற்ற போட்டியை பொருத்தவரை பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட ஆர்.சி.பி. அணி 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த ஆர்.சி.பி. அணி 20 ஓவர்களில் 250 ஓட்டங்களை பெற்றது. 

இந்த இமாலய இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சி.எஸ்.கே. அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் 207 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara