Header Logo

செய்திகள்
விபத்தில் சிக்கியவர்களை வீதியில் இறங்கி காப்பாற்றிய வைத்தியர்கள்!

Apr 6, 2026 - 03:49 PM -

0

விபத்தில் சிக்கியவர்களை வீதியில் இறங்கி காப்பாற்றிய வைத்தியர்கள்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தொடாங்கொட மற்றும் வெலிபென்ன நுழைவாயில்களுக்கு இடையே இன்று (06) அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் ஊர்தியுடன், சிமெந்துத் தூள் ஏற்றிச் சென்ற பவுசர் வாகனம் மோதிப் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த விபத்தில் இரண்டு சாரதிகள் உட்பட நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்து நடந்த வேளையில் அந்த வீதியால் பயணித்த கம்புருபிட்டிய ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் வைத்தியர் கித்மா குணரத்ன மற்றும் அவரது கணவரான தெனியாய தேரங்கல ஆரம்ப சுகாதார மத்திய நிலையத்தின் வைத்தியர் வித்வ களுதொட்ட ஆகியோர், உடனடியாகச் செயற்பட்டு சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக அவ்விடத்தில் தங்கியிருந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 

இவர்கள் உயிரிழப்புக்களைத் தவிர்க்கும் நோக்கில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து காயமடைந்தவர்களுக்கு அவசர சிகிச்சைகளை வழங்கியதாக 'அத தெரண'விற்குத் தகவல் கிடைத்துள்ளது. 

டயர் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு கொழும்பிலிருந்து மிதிகம நோக்கிச் சென்ற கொள்கலன் ஊர்தியின் பின் சக்கரம் ஒன்றில் காற்று வெளியேறியதால், அதனை மாற்றுவதற்காக வீதியோரத்தில் நிறுத்திச் சாரதி சக்கரத்தைக் கழற்றிக்கொண்டிருந்த போதே பின்னால் வந்த சிமெந்து பவுசர் வாகனம் அதன் மீது மோதியுள்ளது. 

விபத்தின் போது சிமெந்து ஏற்றிச் சென்ற வாகனத்தின் முன் பகுதியில் மூவர் பயணித்துள்ளதுடன், அவர்கள் வாகனத்திற்குள் சிக்கியிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

பின்னர் அங்கு வந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், வைத்தியர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய வாகனத்திற்குள் சிக்கியிருந்தவர்களைப் பத்திரமாக வெளியே எடுத்து, அவர்களுக்கு ஒக்சிஜன் வழங்கி மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைத்தனர். 

வாகனத்திற்குள் சிக்கியிருந்த சாரதியை மீட்பதற்கு சுமார் மூன்று மணித்தியாலங்கள் எடுத்துள்ளது. 

இதன் காரணமாக ஒரு மருங்கு சுமார் 2 மணித்தியாலங்கள் மூடப்பட்டதுடன், சாரதியை வெளியே எடுக்கும் போது சுமார் அரை மணித்தியாலம் வீதி முழுமையாக மூடப்பட்டதாகப் பொலிஸார் கூறினர். 

காயமடைந்தவர்கள் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title