Header Logo
Mogo Academy

விளையாட்டு
ஆர்சிபியை பின்னுக்கு தள்ளிய பஞ்சாப் கிங்ஸ்!

Apr 7, 2026 - 10:12 AM -

0

ஆர்சிபியை பின்னுக்கு தள்ளிய பஞ்சாப் கிங்ஸ்!
Mobitel inner

ஐபிஎல் 2026 சீசனின் புள்ளிப் பட்டியலில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியதால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நான்கு புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது. 

நேற்று (07) இரவு பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றிருந்தால் ஆர்சிபி முதலிடத்தைத் தக்கவைத்திருக்கும். ஆனால், எதிர்பாராதவிதமாக போட்டி மழையால் தடைபட்டதால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. 

இதன் விளைவாக, பஞ்சாப் கிங்ஸ் ஐந்து புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் தற்போது முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆர்சிபி அணி நான்கு புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று, 2.23 என்ற சிறந்த ரன் ரேட்டுடன் நான்கு புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் இரண்டு போட்டிகளில் வென்று அதே நான்கு புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும் உள்ளன. 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி பெற்று ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றியுடன் இரண்டு புள்ளிகளைப் பெற்று ஆறாவது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி இரண்டு போட்டிகளுக்கு ஒரு வெற்றியுடன் இரண்டு புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும் உள்ளன. மழை காரணமாக ஒரு புள்ளி பெற்ற கொல்கத்தா எட்டாவது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் ஒன்பதாவது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் பத்தாவது இடத்திலும் நீடிக்கின்றன.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara