Header Logo

செய்திகள்
ஒரு கோடி ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களுடன் நால்வர் கைது

Apr 7, 2026 - 11:05 AM -

0

ஒரு கோடி ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களுடன் நால்வர் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களுடன் பெண் ஒருவர் உள்ளிட்ட நால்வர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

விமான நிலையத்தின் பசுமைப் பாதையூடாக (Green Channel) இந்த மருந்துப் பொருட்களைக் கொண்டு வர முயற்சித்த போதே, இன்று (07) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக 'அத தெரண' விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். 

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் இந்தியாவின் பெங்களூர் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அவர்கள் கொண்டு வந்த 08 பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஊசி மருந்துகள், மாத்திரைகள், கெப்ஸ்யூல் (Capsule) வகை மருந்துகள் மற்றும் பூசு மருந்துகள் (Ointments) உள்ளிட்ட மருந்துப் பொருட்களைச் சுங்க அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர். 

இந்த மருந்துப் பொருட்கள் குறித்து சுங்கத் திணைக்களத்திற்குத் தெளிவுபடுத்தப்படவில்லை என்பதுடன், சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் முறையான அனுமதியின்றி இவை நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title