Header Logo

விளையாட்டு
வெற்றிப்பாதைக்கு திரும்புமா மும்பை அணி

Apr 7, 2026 - 12:50 PM -

0

வெற்றிப்பாதைக்கு திரும்புமா மும்பை அணி

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 19 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் தலா 2 முறை, 4 அணிகளுடன் தலா ஒரு முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். 

லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே - ஆப்' சுற்றுக்கு முன்னேறும். இந்த நிலையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று (07) இரவு 7.30 மணிக்கு நடக்கும் 13 ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன. 

ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் அணி தனது முதல் இரு ஆட்டங்களிலும் (சென்னை, குஜராத்) வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் உள்ளது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக 221 ஓட்டங்கள் இலக்கை சர்வ சாதாரணமாக விரட்டிப்பிடித்து சாதனை படைத்தது. ஆனால் டெல்லிக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் 162 ஓட்டங்களை மட்டுமே எடுத்த மும்பை அணி, தோல்வி அடைந்தது. 

இப்போது வெற்றிப்பாதைக்கு திரும்பும் உத்வேகத்துடன் உள்ள மும்பை அணி இன்று களமிறங்க உள்ளது. உடல்நலக்குறைவால் கடந்த ஆட்டத்தில் ஆடாத அணி தலைவர் ஹர்திக் பாண்ட்யா உடல்தகுதியை எட்டி விட்டார். அவர் இன்றைய ஆட்டத்திற்கு திரும்புவார் என அந்த அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே தெரிவித்தார். 

இந்த இரு அணிகள் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 16 இல் மும்பையும், 14 இல் ராஜஸ்தானும் வெற்றி பெறறுள்ளன.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title