Header Logo
Mogo Academy

வணிகம்
TAGS விருதுகள் 2025 நிகழ்வில் ஜோன் கீல்ஸ் நுகர்வோர் உணவுத் துறை பல வெற்றிகளை அள்ளிக்குவித்துள்ளது

Apr 7, 2026 - 01:25 PM -

0

TAGS விருதுகள் 2025 நிகழ்வில் ஜோன் கீல்ஸ் நுகர்வோர் உணவுத் துறை பல வெற்றிகளை அள்ளிக்குவித்துள்ளது
Mobitel inner

ஜோன் கீல்ஸ் நுகர்வோர் உணவுத் துறை (John Keells Consumer Foods Sector - JKCF) நிதி அறிக்கையிடல் மகத்துவத்தில் மீண்டும் ஒருமுறை தனது முன்னிலையை நிரூபித்துள்ளது. மதிப்புமிக்க CA TAGS விருதுகள் 2025 நிகழ்வில் பல அங்கீகாரங்களைப் பெற்றுள்ளது. சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் பிஎல்சி (Ceylon Cold Stores PLC - CCS) மற்றும் கீல்ஸ் ஃபூட் புரொடக்ட்ஸ் பிஎல்சி (Keells Food Products PLC - KFP) உள்ளிட்ட அதன் கீழ் இயங்கும் பல்வேறு நிறுவனங்களின் மத்தியில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் ஒழுக்கமான நிதி முகாமைத்துவத்துக்காக இத்துறையின் இடைவிடாத அர்ப்பணிப்பை இந்த அங்கீகாரம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 

1866 ம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கையின் பழமையான மற்றும் மிகவும் மதிக்கப்படும் நிறுவனங்களில் ஒன்றான சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் பிஎல்சி, எலிஃபன்ட் ஹவுஸ் போன்ற புகழ்பூத்த வர்த்தகநாமங்களின் தாயகமாகும். இது உணவு மற்றும் பானங்கள் நிறுவனங்களின் (ரூ.15 பில்லியனுக்கு மேற்பட்ட குழும விற்பனைப்புரள்வு) கீழ் தங்க விருதைப் பெற்றது. 1983 முதல் இலங்கையின் பதப்படுத்தப்பட்ட உணவுத் துறையில் முன்னோடியாக இருக்கும் கீல்ஸ் ஃபூட் புரொடக்ட்ஸ் பிஎல்சி, உணவு மற்றும் பானங்கள் நிறுவனங்களின் (ரூ.15 பில்லியன் வரையான குழும விற்பனைப்புரள்வு) கீழ் தங்க விருதை வென்றுள்ளது. இவற்றோடு, நிதி அல்லாத சேவைகளுக்கான நிறுவன நிர்வாக வெளிப்படுத்தலுக்கான வெண்கல விருதையும் சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் பிஎல்சி வென்றுள்ளது. ஜோன் கீல்ஸ் நுகர்வோர் உணவுத் துறையின் நிதிப் பிரிவால் பெறப்பட்டுள்ள இவ்விருதுகள், நிர்வாகம் மற்றும் உயர்தர வெளிப்படுத்தல் தராதரங்களுக்கான ஒருங்கிணைந்த மற்றும் ஒழுக்கமான துறைவாரியான அணுகுமுறையைப் பிரதிபலிக்கிறது. 

வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் ஒழுங்குமுறை சார்ந்த சிறந்த நடைமுறைகளுடன் இணைந்த நிறுவன அறிக்கையிடலில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை TAGS விருதுகள் அங்கீகரிக்கின்றன. CCS மற்றும் KFP ஆகியவற்றால் பெறப்பட்ட பல்வேறு விருதுகள், துறையின் ஒருங்கிணைந்த நிர்வாக கட்டமைப்பின் வலிமையையும், முதலீட்டாளர்கள், ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதற்கான அதன் நீடித்த அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகின்றன. 

ஜோன் கீல்ஸ் நுகர்வோர் உணவுத் துறையின் தலைவர் தமிந்த கம்லத் அவர்கள் இது தொடர்பில் கூறுகையில், “எமது வணிகங்கள் அனைத்தின் மத்தியிலும் மிக உயர்ந்த தராதரங்களுடனான நிர்வாகம் மற்றும் வெளிப்படைத்தன்மையை நிலைநிறுத்துவதற்கான எங்கள் அர்ப்பணிப்புமிக்க உறுதிப்பாட்டை இந்த விருது அங்கீகாரங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. ஜோன் கீல்ஸ் நுகர்வோர் உணவுத் துறையில், வலுவான அறிக்கையிடல் மற்றும் பொறுப்புக்கூறலை ஒழுங்குமுறை கடப்பாடுகளாக மட்டுமல்லாமல், பங்குதாரர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் மற்றும் நிலைபேற்றியல் கொண்ட வளர்ச்சியை முன்னெடுக்கும் அடிப்படைத் தூண்களாக நாங்கள் கருதுகிறோம். 

ஜோன் கீல்ஸ் நுகர்வோர் உணவுத் துறையின் பிரதம நிதி அதிகாரி நெலிந்திரா பெர்னாண்டோ அவர்கள் இது குறித்து மேலும் கூறுகையில், “எங்கள் செயல்பாடுகளுக்குள் உட்பொதிந்துள்ள ஒழுக்கமான நிதிக் கட்டமைப்புகள் மற்றும் துல்லியமான அறிக்கையிடல் செயல்முறைகளுக்கு TAGS விருதுகள் சிறந்ததொரு சான்றாகும். எங்கள் ஒருங்கிணைந்த நிதிச் செயல்பாடானது வெளிப்படுத்தல்களில் நிலைமாறாமை, துல்லியம் மற்றும் தெளிவை உறுதி செய்கிறது. இது மிகச் சிறந்த அறிக்கையிடல் தராதரங்களைப் பேணுவதில் எங்கள் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.


MOST READ

காணொளி
மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

Mobitel Upahara