Header Logo
Mogo Academy

வணிகம்
செலிங்கோ லைஃப் தலைவர் ஆர்.ரெங்கநாதன் அவர்களுக்கு CMAஇனால் கௌரவம் வழங்கப்பட்டது

Apr 7, 2026 - 01:28 PM -

0

செலிங்கோ லைஃப் தலைவர் ஆர்.ரெங்கநாதன் அவர்களுக்கு CMAஇனால் கௌரவம் வழங்கப்பட்டது
Mobitel inner

செலிங்கோ லைஃப் இன்சூரன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிறைவேற்றுத் தலைவர் ஆர்.ரெங்கநாதன் அவர்களுக்கு, நிதி ஒழுக்கம், நிர்வாகம் மற்றும் நிலையான பெறுமதி உருவாக்கத்தில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், இலங்கை,சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவக் கணக்காளர்கள் நிறுவனத்தினால் (Institute of Certified Management Accountants of Sri Lanka (CMA)) முகாமைத்துவ கணக்கியல் துறையில் சிறப்பான அங்கீகாரம் (Distinguished Recognition in the Profession of Management Accounting) என்ற பெருமைக்குரிய விருது வழங்கப்பட்டுள்ளது. 

இந்த விருது, ஒருங்கிணைந்த அறிக்கையிடல் மற்றும் நிலைத்தன்மை கணக்கியல் தரநிலைகள் குறித்த பயிற்சிப்பட்டறை தொடக்க நிகழ்வில் வழங்கப்பட்டது. இது நவீன நிறுவன முகாமைத்துவத்தில் ஒருங்கிணைந்த அறிக்கையிடல் கட்டமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாக (ESG) கோட்பாடுகளின் அதிகரித்து வரும் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. 

தொழில்முறையில் ஒரு பட்டய கணக்காளரான ஆர்.ரெங்கநாதன் அவர்கள், செலிங்கோ லைஃப் நிறுவனம் தொடங்கிய காலத்திலிருந்து அதன் நிதி மற்றும் நிர்வாக அமைப்பை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். 1988 ஆம் ஆண்டு, காப்புறுதி துறையின் தனியார்மயப்படுத்தலுக்குப் பின்னர் ஆயுள் காப்புறுதி செயல்பாடுகள் தொடங்கியதிலிருந்து, அவர் நிறுவனத்தை வழிநடத்தி வருகிறார்.அவர் எப்போதும் வெளிப்படைத் தன்மை, பொறுப்புணர்வுமற்றும் நீண்டகால பெறுமதி உருவாக்கம் ஆகிய கோட்பாடுகளை முன்னிறுத்தி, அறிக்கையிடல் மற்றும் நிலைத்தன்மை தொடர்பான உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடன் நிறுவனத்தை இணைத்து வழிநடத்தி வருகிறார். 

அவரது தலைமையின் கீழ், செலிங்கோ லைஃப் நிறுவனம் இலங்கையின் ஆயுள் காப்புறுதி துறையில் சந்தை முன்னணியாக தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது; இந்த முன்னணித் தகுதியை அது தொடர்ந்து 22 ஆண்டுகளாகப் பேணி வருகிறது.ஆர்.ரெங்கநாதன் அவர்களின் நிதி நுண்ணறிவு மற்றும் மூலோபாய முன்னோக்குப் பார்வை, நிறுவனத்தின் ஆயுள்நிதியை ரூ. 200 பில்லியனைத் தாண்டி வளர்ச்சியடையச் செய்துள்ளது. மேலும், புதுமையான தயாரிப்பு மேம்பாடுகள் மூலம், நாடு முழுவதும் 10 இலட்சத்துக்கும் அதிகமான குடும்ப வருமானம் ஈட்டுபவர்களுக்கு ஆயுள் காப்புறுதி பாதுகாப்பை வழங்க நிறுவனத்தினால் முடிந்துள்ளது. இந்த அங்கீகாரமானது, நிதி முகாமைத்துவம் மற்றும் நிலைத்தன்மை துறைகளில் ஒரு சிந்தனைத் தலைவராக ஆர்.ரெங்கநாதனின் விரிவான பங்களிப்பையும் பிரதிபலிக்கிறது. குறிப்பாக, காப்புறுதி துறையின் தரநிலைகளை உயர்த்துவதில், வலுவான நிர்வாக நடைமுறைகள் மற்றும் ஒழுக்க நெறிகளை நிறுவுவதில், அதேசமயம் நிறுவனத்தின் நிலைத்தன்மை மற்றும் நீடித்த வளர்ச்சியை முன்னேற்றுவதிலும் அவரது பங்கு குறிப்பிடத்தக்கது. 

செலிங்கோ லைஃப் நிறுவனம், இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் தொடர்ந்து 21 ஆண்டுகளாக சந்தை முன்னணியில் இருந்து வருகிறது. காப்புறுதி பெற்றவர்களின் இலக்குகள் மற்றும் கனவுகளை பாதுகாக்கவும், அபாயங்களை குறைக்கவும் உதவும் புத்தாக்கமான காப்புறுதித் தீர்வுகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. 2025 ஆம் ஆண்டில், டீசயனெ குiயெnஉந அமைப்பின் மதிப்பீட்டின்படி,செலிங்கோ லைஃப் நிறுவனம் இலங்கையின் மிக உயர்ந்த மதிப்புள்ள காப்புறுதி வர்த்தகநாமமாகவும், 22-வது மிக பெறுமதி வாய்ந்த வர்த்தகநாமமாகவும் தரவரிசைப்படுத்தப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு முறை இலங்கையின் ஆண்டுக்கான வர்த்தகநாமம் என்ற விருதினை பெற்றுள்ள இந்த நிறுவனம், இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ICCSL) மற்றும் முகாமைத்துவ கணக்காளர்களுக்கான பட்டய நிறுவனம் (CIMA) ஆகிய அமைப்புகளால் இலங்கையின் மிகவும் பாராட்டப்பட்ட 10 நிறுவனங்களில் ஒன்றாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

Mobitel Upahara