Apr 7, 2026 - 01:34 PM -
0
இலங்கையர்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக மலிவு விலையில் சுகாதாரக் காப்புறுதித் திட்டங்களை வழங்கும் இலங்கையின் நம்பகமான காப்புறுதி தாரரான ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம், கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மார்ச் 6ஆம் திகதி முதல் 8ஆம திகதி வரை நடைபெற்ற ‘Medicare 2026’ மருத்துவக் கண்காட்சியில் உத்தியோகப்பூர்வ காப்புறுதிப் பங்காளராக இணைந்துகொண்டது. இலங்கையின் மிகப்பெரியதும், மிகவும் நம்பகரமானதுமான சுகாதார மற்றும் நல்வாழ்வுக்கான கண்காட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ள Medicare 2026 மருத்துவக் கண்காட்சியில், சுகாதார நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 10,000 இற்கும் அதிகமான பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.
அனைவருக்கும் மலிவான விலையில், நம்பகமான காப்புறுதி வசதி கிடைக்கப் பெறுவதை உறுதி செய்வதே ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம் இக்கண்காட்சியில் இணைந்துகொண்டதன் முக்கிய நோக்கமாகும். இத்துடன் இந்தக் கூட்டாண்மையின் மூலம் ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் மக்களைச் சென்றடைந்து, அவர்கள் தமது சொந்த உடல்நலத்தையும் குடும்ப உறுப்பினர்களின் உடல்நலத்தையும் பேணிக்கொள்ளச் செய்வதற்கான ஊக்குவிப்பை வழங்கியுள்ளது. தற்போதும் எதிர்காலத்திலும் ஒவ்வொரு இலங்கை குடும்பத்தின் உடல்நலம், பாதுகாப்பு மற்றும் மனநலம் என்பவற்றில் நிறுவனம் காண்பித்துவரும் நீண்டகால அர்ப்பணிப்பின் மற்றுமொரு படிக்கல்லாக இந்தக் கூட்டாண்மை அமைந்துள்ளது.
நோய்கள், விபத்துகள் மற்றும் எதிர்பாராத மருத்துவச் செலவுகள் என்பன மிகச் சிறப்பாகத் திட்டமிடப்பட்ட வாழ்க்கையைக் கூட சீர்குலைக்கக்கூடும் என்பதுடன், இலங்கை முழுவதும் உள்ள பல குடும்பங்களுக்கு மருத்துவமனைச் செலவுகளால் ஏற்படும் நிதிச் சுமை ஒரு பெரும் பாரமாக உள்ளது என்பதை ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவுனம் நன்கு புரிந்துகொண்டுள்ளது. சிகிச்சைகளைப் போலவே நோய்த் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முக்கியமானவை என்பதை இந்நிறுவனம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது. மேலும், சரியான காப்புறுதித் திட்டத்தைப் பெற்றுக்கொண்டிருப்பதானது உடல்நலப் பிரச்சினை ஏற்படும்போது உண்டாகும் நிதி இழப்பைச் சமாளிப்பதை எளிதாக்கும். இந்தக் கண்காட்சியில், ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனத்தினால் சகல இலங்கையர்களினதும் சுகாதாரப் பாதுகாப்புத் தொடர்பில் காண்பித்துவரும் அக்கறையைப் பறைசாற்றும் வகையில் நிறுவனத்தின் முதன்மை சுகாதாரக் காப்புறுதித் தீர்வுகளான Mediplus மற்றும் Medi60 ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது.
Mediplus காப்புறுதித் திட்டம் என்பது, விரிவான மருத்துவக் காப்புறுதிப் பாதுகாப்பை நாடும் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் காப்புறுதித் திட்டம் மருத்துவமனைச் செலவுகள், சிறப்பு மருத்துவர் ஆலோசனைகள், அறுவை சிகிச்சைகள் மற்றும் நோயறிதல் சோதனைகளை (Diagnostic Tests) உள்ளடக்கியதாக, எதிர்பாராத மருத்துவச் செலவுகளால் காப்புறுதிதாரர்களின் வாழ்க்கை பாதிக்கப்படாது என்ற உறுதியை அளிக்கிறது. Medi60 காப்புறுதித் திட்டம் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்காகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சிரேஷ்ட பிரஜைகளின் சுகாதாரத் தேவைகளை உணர்ந்து, தனியார் மருத்துவமனைச் செலவுகள், மருத்துவ நிபுணர்களின் கட்டணங்கள், அறுவை சிகிச்சைச் செலவுகள் மற்றும் அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான தினசரிக் கொடுப்பனவு போன்றவற்றை உள்ளடக்கியதாக இது அமைந்துள்ளது. சிரேஷ்ட பிரஜைகள் கண்ணியம், பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையுடன் நவீன சுகாதார வசதிகளை அணுகுவதற்கும், அவர்கள் சங்கடங்களை எதிர்கொள்ளாமல் இருப்பதற்குமான காப்புறுதிச் சூழலை Medi60 காப்புறுதித் திட்டம் வழங்குகிறது. காப்புறுதித் தீர்வுகளையும், சுகாதாரத் துறையில் புத்தாக்கங்களையும் எவ்வாறு ஒருங்கிணைக்க முடியும் என்பதற்கு இக்காப்புறுதித் திட்டங்கள் சிறந்த உதாரணங்களாக அமைகின்றன. Mediplus மற்றும் Medi60 ஆகிய காப்புறுதித் திட்டங்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம் தேசிய சுகாதார முன்னுரிமைகளை ஒருங்கிணைப்பதற்கும், நம்பிக்கையை வளர்ப்பதற்கும், தலைமுறைகளுக்கு மன அமைதியை வழங்குவதற்கும் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனத்தின் சேவைகள் மற்றும் காப்புறுதித் தீர்வுகள் குறித்து முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வுப் பிரசாரங்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் மூலம் மூன்று நாள் கண்காட்சி நிகழ்வி் பங்கெடுத்த ஆயிரக்கணக்கான பங்காளர்களிடம் அவை கொண்டு சேர்க்கப்பட்டன. நிறுவனத்தின் குழுவினர் தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனை சேவைகளை வழங்கி, தங்களையும் தங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ளக் கிடைக்கும் காப்புறுதித் தீர்வுகள் குறித்து சமூத்திற்கு ஒரு சிறந்த புரிதலை அளித்தது.
இந்தக் காணட்சியில் கலந்துகொண்ட பார்வையாளர்கள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த தங்கள் அறிவைச் சோதிக்கும் வினாடி வினாக்கள், 'லக்கி வீல்' விளையாட்டு, மற்றும் உடற்தகுதி மற்றும் நல்ல சுகாதாரப் பழக்கவழக்கங்கள் குறித்த செய்திகளுடன் கூடிய மிதிவண்டிப் பயணங்கள் உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான செயல்பாடுகளில் பங்கேற்றனர். ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனத்தின் அரங்கிற்கு வருகை தந்த பார்வையாளர்களுக்கு சிறப்பு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
Medicare 2026 மருத்துவக் கண்காட்சியுடன் கூட்டாண்மை ஏற்படுத்தியதன் மூலம், தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பிற்கான சுகாதாரக் காப்புறுதியின் உண்மையான மதிப்பு குறித்து இந்நிறுவனத்தினால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முடிந்தது.
