Header Logo
Mogo Academy

வணிகம்
இலங்கையில் தனது சேவைகளை தொடர்ந்து விஸ்தரித்து வருகின்ற Uber Eats தற்போது நுவரெலியாவிலும் தனது சேவைகளை வழங்குகின்றது

Apr 7, 2026 - 01:38 PM -

0

இலங்கையில் தனது சேவைகளை தொடர்ந்து விஸ்தரித்து வருகின்ற Uber Eats தற்போது நுவரெலியாவிலும் தனது சேவைகளை வழங்குகின்றது
Mobitel inner

Uber Eats சேவைகள் தற்போது நுவரெலியாவிலும் கிடைக்கப்பெறுகின்றது. உள்ளூர்வாசிகளும், சுற்றுலாப் பிரயாணிகளாக வருகை தருகின்றவர்களும் குளிரான மாலைப்பொழுதில் சூடான கொத்துரொட்டி முதல் சோறு, கறி அல்லது மொறுமொறுப்பான முட்டை அப்பம் என தாம் விரும்புகின்ற உணவுகளை தாம் இருக்கும் இடங்களுக்கே தருவித்துக்கொள்ள முடியும். 

குளிரான காலநிலை, பழம்பெரும் உலகின் இதம், எங்கும் படர்ந்துள்ள தேயிலைத் தோட்டங்கள் என அழகிய சூழலுக்குப் புகழ்பெற்ற நுவரெலியாவிற்கு ஏப்ரல் விடுமுறைக் காலத்தில் இலங்கை மற்றும் சர்வதேச சுற்றுலாப் பிரயாணிகள் பெரும் எண்ணிக்கையில் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் மாலைப்பொழுதுகளில் குளிரான காலநிலை அதிகரிக்கும் சூழலில், உணவுக்கான தெரிவுகள் மட்டுப்படுத்தப்படுவதுடன், உணவகங்கள் பலவும் நேரத்திற்கே மூடப்படும் நிலைமை காணப்படுகின்றது. 

தற்போது Uber Eats சேவை அங்கு கிடைக்கப்பெறுவதால், வாடிக்கையாளர்கள் வெளியில் செல்ல வேண்டிய தேவையைப் போக்கி, உள்ளூர் உணவகங்கள் மற்றும் அருகாமையிலுள்ள பிரபலமான தெரிவுகள் மூலமாக கிடைக்கப்பெறும் உணவு வகைகளை ஆராய்ந்து, தமக்கு விருப்பமானவற்றைத் தருவித்துக் கொள்ள முடியும். முன்னிரவு நேரங்களில் பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டாலும் கூட உணவு வகைகளைப் பெற்றுக்கொள்ளும் வசதியை இத்தளம் மேம்படுத்துகின்றது. நுவரெலியாவில் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் காப்பிடப்பட்ட பைகள் விசேடமாக பயன்படுத்தப்படுவதால் உணவு வகைகளை சூடாகவே விநியோகம் செய்வதை உறுதிசெய்ய உதவும். இலங்கை, இந்திய, சீன, தாய், மற்றும் அரேபிய உணவு வகைகளையும் மற்றும் KFC, Pizza Hut, மற்றும் Domino’s போன்ற சர்வதேச வர்த்தகநாமங்களின் கீழான உணவு வகைகளையும் என பல்வகைப்பட்ட உணவுகளை வாடிக்கையாளர்கள் தெரிவு செய்துகொள்ள முடியும். 

இந்த நகரத்தில் உள்ள உணவகங்கள் கூடுதலான அளவில் வாடிக்கையாளர்களை எட்டுவதற்கு இது இடமளிப்பதால் உள்ளூர் சமூகத்திற்கு இந்த அறிமுகம் உதவியாக அமையும். அத்துடன், குறிப்பாக பரபரப்பான விடுமுறைக் காலத்தில் விநியோகக் கூட்டாளர்கள் தமது வசதிக்கும், நேரத்திற்கும் ஏற்றவாறு சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்களையும் இது தோற்றுவிக்கும். Uber Sri Lanka நிறுவனத்தின் விநியோக சேவைக்கான உள்நாட்டு முகாமையாளர் வருண் விஜேவர்த்தன அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்: “நுவரெலியா நகரமானது இலங்கையில் மிகவும் அபிமானம் பெற்ற இடங்களில் ஒன்றாகத் திகழ்வதுடன், குறிப்பாக ஏப்ரல் பருவகாலத்தில் அதன் சிறப்பு இன்னும் கூடுதலானது. தற்போது அங்கு Uber Eats சேவைகள் கிடைப்பதால் தினசரி விருப்பத்திற்குரிய உணவுகள் முதல் முன்னிரவு சிற்றுண்டிகள் வரை மிகவும் சௌகரியமாக உணவுகளை உண்டு மகிழ்வதை நாம் இலகுவாக்கியுள்ளோம். மேலும், உள்ளூர் உணவகங்களுக்கு ஆதரவளித்து, சமூகத்தின் மத்தியில் வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்புக்களையும் தோற்றுவித்துள்ளோம். உள்நாட்டில் அபிமானம் பெற்ற உணவுகளைச் சௌகரியமாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி, இலங்கையில் இன்னும் கூடுதலான அளவில் சமூகங்கள் வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி இலங்கை எங்கிலும் எமது சேவைகளை தீவிரமாக விரிவுபடுத்தும் முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ள தருணத்தில் தற்போது இந்த சேவை நுவரெலியாவில் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.” 

ஹிக்கடுவ, அம்பலாங்கொடை, சிலாபம், வென்னப்புவ, மற்றும் புத்தளம், யாழ்ப்பாணம், கம்பளை, மாத்தளை, மாத்தறை, வெலிகம, மிரிஸ்ஸ, மற்றும் அனுராதபுரம் அடங்கலாக கடந்த ஆண்டில் 6 மாவட்டங்களுக்கு சேவைகள் விஸ்தரிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது நுவரெலியாவிலும் இச்சேவைகள் கிடைக்கப்பெறுகின்றன. நாட்டில் விநியோக சேவைகளுக்கு அபிமானம் பெற்ற தளமாக Uber Eats திகழ்ந்து வருவதை இது மேலும் வலுப்படுத்துகின்றது.


MOST READ

காணொளி
மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

Mobitel Upahara