Header Logo

செய்திகள்
முன்னறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்கப்படுகிறதா?

Apr 7, 2026 - 01:42 PM -

0

முன்னறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்கப்படுகிறதா?

தற்போது நிலவும் வலுசக்தி நெருக்கடிக்கு மத்தியில், அரசாங்கம் இதுவரையில் திட்டமிட்ட துண்டிப்பு எதனையும் அமுல்படுத்தவில்லை என்றும், அவ்வப்போது ஏற்படும் மின்சாரத் தடை தொழில்நுட்பக் கோளாறுகளால் ஏற்படும் மின்சாரத் தடைகளே (Breakdowns) என்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார். 

நாடளாவிய ரீதியில் சில இடங்களில் தினமும் ஒரு மணித்தியாலம் அல்லது சில மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டால் அது குறித்து மக்களுக்கு முறையாக ஏன் அறிவிக்கப்படவில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று (07) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். 

அதற்குப் பதிலளித்த அமைச்சர், மக்களைத் தவறாக வழிநடத்தும் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டாம் என்றும், மின்சாரத் தடைகள் அவ்வப்போது ஏற்படுவது நாட்டு மக்களுக்குப் புதிய விடயமல்ல என்றும் குறிப்பிட்டார். 

குறுகிய காலத்திற்கு இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்படுவதை 'மின்வெட்டு' என்று அழைக்காமல், 'மின்சாரத் தடை' என அழைப்பதே பொருத்தமானது என்றும் அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

MOST READ

காணொளி
பாராளுமன்றில் ஜீவன் அதிரடி!

பாராளுமன்றில் ஜீவன் அதிரடி!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு

எங்கள் பிரச்சினைகளை ஏன் கேட்கவில்லை?

எங்கள் பிரச்சினைகளை ஏன் கேட்கவில்லை?

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

title