Header Logo
Mogo Academy

வணிகம்
SLT-MOBITEL பாடசாலைகளைப் புனரமைப்பதனூடாக நம்பிக்கையூட்டி நிலைபேறான செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பு

Apr 7, 2026 - 04:02 PM -

0

SLT-MOBITEL பாடசாலைகளைப் புனரமைப்பதனூடாக நம்பிக்கையூட்டி நிலைபேறான செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பு
Mobitel inner

சூழல், சமூகம் மற்றும் ஆளுமை (ESG) ஆகிய முன்னுரிமைகளுக்கான தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாக, பாதுகாப்பான மற்றும் ஆதரவான கற்றல் சூழல்களை வழங்குவதனூடாக சமூகங்களை வலுப்படுத்தும் நோக்கில், தனது கல்விசார் தூணின் கீழ் தாக்கம் மிக்க பல செயற்திட்டங்களை SLT-MOBITEL முன்னெடுக்கிறது. 

தித்வா புயல் தாக்கத்தின் போது அனுராதபுரத்தின் மொரகெவ வித்தியாலயம் மற்றும் துருவில ஆரம்ப பாடசாலை ஆகியன மோசமாக சேதமடைந்திருந்தன. அதனால் நூற்றுக் கணக்கான மாணவர்களுக்கு தமது கல்விச் செயற்பாடுகளைத் தொடர்வதற்கு பாதுகாப்பான இடவசதி காணப்படவில்லை. இலங்கையில் கல்வி என்பது அன்றாட வாழ்வின் ஓர் அடிப்படையாகும். இது குடும்பங்களுக்கும் சமூகங்களுக்கும் ஒரு நம்பிக்கை, ஸ்திரத்தன்மை மற்றும் வருங்கால வாய்ப்புகளை வழங்கும் ஊற்றாகத் திகழ்கின்றது. இளையவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் கல்வி நிறுவனங்கள் வகிக்கும் முக்கிய பங்கை உணர்ந்து, இரண்டு பாடசாலைகளையும் புனரமைக்கும் பணிகளை SLT-MOBITEL முன்னெடுத்தது. இதன் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமது இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு வழிவகுத்ததுடன், நீண்டகால சமூக அபிவிருத்திக்கும் இது பங்களிப்புச் செய்துள்ளது. 

மொரகெவ வித்தியாலயம் மற்றும் துருவில ஆரம்ப பாடசாலை ஆகியவற்றில் முன்னெடுக்கப்பட்ட மறுசீரமைப்பு பணிகளினூடாக, இந்த பாடசாலைகள் மீண்டும் பாதுகாப்பான மற்றும் மாணவர்களை வரவேற்கும் சூழலாக மாற்றம் பெற்றன. இந்தப் புனரமைப்புப் பணிகள் பூர்த்தியடைந்து 2026 பெப்ரவரி மாதம் பாடசாலைக் கட்டிடங்கள் மீண்டும் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்கள் பாதுகாப்பான மற்றும் புதுப்பொலிவு பெற்ற சூழலில் தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடர முடிந்தது. SLT-MOBITEL நிறுவனத்தைப் பொறுத்தவரையில், இந்தப் புனரமைப்பானது வெறும் கட்டிடத் திருத்த வேலைகளுடன் மாத்திரம் நின்றுவிடவில்லை. இப்பாடசாலைகளை மீளமைப்பதனூடாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் அன்றாடச் செயற்பாடுகள், பாதுகாப்பு மற்றும் எதிர்கால நம்பிக்கையை மீள உறுதிப்படுத்த முடியும் என்பதை நிறுவனம் நன்கு உணர்ந்துள்ளது. 

இத்திட்டத்தின் மூலம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் நேரடியாகப் பயனடைந்துள்ளதுடன், தற்போது பாதுகாப்பான வகுப்பறைகள், செயற்பாட்டு நிலையிலுள்ள வசதிகள் மற்றும் தமது கல்வி வளர்ச்சிக்குத் தேவையான ஸ்திரத்தன்மை ஆகியவற்றையும் பெற்றுள்ளனர். மேலும், அவர்களின் கல்வி பெறுமதி மிக்கது என்பதையும், அது ஒட்டுமொத்த இலங்கைச் சமூகத்திற்கும் முக்கியமானது என்பதையும் இச்செயற்திட்டம் பிள்ளைகளுக்கு உணர்த்துகின்றது. 

SLT-MOBITEL சிறுவர்களின் கல்வி என்பது ஒரு தேசியப் பொறுப்பு என்பதையும், அதுவே இலங்கையின் சமூக முன்னேற்றம், டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் சமூக மீளெழுச்சி ஆகியவற்றின் அத்திவாரம் என்பதையும் SLT-MOBITEL நன்கு உணர்ந்துள்ளது. தித்வா புயல் போன்ற அனர்த்தங்களின் பின்னர் இப்பாடசாலைகளைப் புனரமைப்பதானது, வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்புதல் மற்றும் சமூகங்களை வலுப்படுத்துதல் ஆகிய முக்கிய நோக்கங்களைக் கொண்ட ஒரு பரந்த தேசிய மறுசீரமைப்பு மற்றும் கல்விசார் முன்னெடுப்பின் ஒரு அங்கமாகும். 

வட மாகாண ஆளுனர் கௌரவ வசந்த ஜினதாசவின் ஆதரவுடன் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ESG கொள்கைகளின் கீழ் பொது மற்றும் தனியார் பங்காண்மைகள் இணைந்து, சமூகப் பொறுப்பு, சூழல் விழிப்புணர்வு மற்றும் சிறந்த ஆளுகை ஆகியவற்றை எவ்வாறு ஏற்படுத்த முடியும் என்பதை இது வெளிப்படுத்தியிருந்தது.


MOST READ

காணொளி
மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

Mobitel Upahara