Header Logo

வணிகம்
தனது 32 ஆண்டுகால வரலாற்றில், 2025 ஆம் ஆண்டில் மிக உயர்ந்த வருவாயைப் பதிவு செய்த Chevron Lanka நிறுவனம்

Apr 7, 2026 - 06:11 PM -

0

தனது 32 ஆண்டுகால வரலாற்றில், 2025 ஆம் ஆண்டில் மிக உயர்ந்த வருவாயைப் பதிவு செய்த Chevron Lanka நிறுவனம்

கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) பட்டியலிடப்பட்ட நிறுவனமான Chevron Lubricants Lanka PLC (Chevron Lanka) (LLUB), இலங்கையில் தனது 32 ஆண்டுகால வரலாற்றிலேயே மிக உயர்ந்த வருவாயை 2025 ஆம் ஆண்டில் ஈட்டி சாதனை படைத்துள்ளது. கொழும்பு பங்குச் சந்தைக்கு வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டு இடைக்கால நிதி அறிக்கைகளின்படி, அதன் மொத்த வருமானம் 24.39 பில்லியன் ரூபாவாக அமைந்ததுடன், அதன் நிகர இலாபம் முதல் முறையாக 4 பில்லியன் ரூபா என்ற மைல்கல்லைக் கடந்துள்ளது. 

ஜனவரி முதல் டிசம்பர் 2025 வரையிலான காலப்பகுதியில் ஈட்டப்பட்ட இந்த சாதனை வருவாயானது, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் விற்பனை அளவில் ஏற்பட்ட வலுவான இரட்டை இலக்க வளர்ச்சியினால் உந்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக, கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவாக ஒரு பங்கிற்கு 16 ரூபா இலாபப்பங்கு வழங்கப்பட்டுள்ளதுடன், கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக உயர்ந்த அளவாக 95% இலாபப்பங்கு வழங்கல் விகிதமும் (அதாவது முழு ஆண்டு வருமானத்தில் 95% பங்குதாரர்களுக்கு வழங்கப்படுதல்) எட்டப்பட்டுள்ளது. Business Today இதழின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் தரவரிசையின்படி, Chevron Lanka நிறுவனம் இலங்கையின் சிறந்த 40 நிறுவனங்களுக்குள் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது. அத்துடன், சொத்துக்களின் மீதான வருவாய், பங்கு மூலதனத்தின் மீதான வருவாய் மற்றும் சொத்து பயன்பாடு போன்ற முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளில் LMD தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பு வர்த்தக நாமமான Caltex®, இலங்கையின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் மிகவும் விரும்பப்படும் வர்த்தக நாமமாகத் தொடர்ந்து மதிப்பிடப்பட்டு வருகிறது. மேலும், அண்மைய சாதனையாக, இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான Best Employer Awardsஇல் முதல் 15 இடங்களுக்குள் தரப்படுத்தப்பட்டுள்ளது. 

1992 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இயங்கி வரும் Chevron Lanka நிறுவனம், லூப்ரிகன்ட்ஸ் (உயவு எண்ணெய்) சந்தையில் முன்னிலை வகிக்கிறது. தற்போது சந்தையில் 35 போட்டியாளர்கள் உள்ள போதிலும், கடந்த 32 ஆண்டுகளுக்கும் மேலாக தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இலங்கையில் மிகப்பரந்த லூப்ரிகன்ட்ஸ் விநியோக வலையமைப்புகளில் ஒன்றைக் கொண்டுள்ள Chevron Lanka, Caltex, Havoline® மற்றும் Delo® ஆகிய பிராண்டுகளின் கீழ் உயவு எண்ணெய்கள் மற்றும் கிரீஸ் (greases) வகைகளை சந்தைப்படுத்துகிறது. மேலும், Chevron Lanka இலங்கையில் ஒரு லூப்ரிகன்ட் கலவை ஆலையையும் கொண்டுள்ளது. இதன் மூலம் இலங்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய ஏற்றுமதி சந்தைகளுக்கும் எண்ணெய்களை வழங்கி வருகின்றது. 

Chevron தொடர்பில் 

Chevron உலகின் முன்னனி ஒருங்கிணைந்த எரிசக்தி நிறுவனங்களில் ஒன்றாகும். மலிவான, நம்பகமான மற்றும் முன்னெப்போதையும் விட தூய்மையான எரிசக்தி என்பது மனித முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது என்று நாங்கள் நம்புகிறோம். Chevron நிறுவனம் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்கிறது; போக்குவரத்து எரிபொருட்கள், லூப்ரிகன்ட்ஸ் (உயவு எண்ணெய்கள்), பெட்ரோ இரசாயனங்கள் மற்றும் சேர்க்கைப் பொருட்களை (additives) தயாரிக்கிறது; அத்துடன் எமது வணிகத்தையும் இத்துறையையும் மேம்படுத்தும் தொழில்நுட்பங்களை உருவாக்குகிறது. எமது எண்ணெய் மற்றும் எரிவாயு வணிகத்தை வளர்ப்பதுடன், எமது செயல்பாடுகளில் கார்பன் செறிவைக் குறைப்பதையும் மற்றும் புதிய எரிசக்தி வணிகங்களை விரிவுபடுத்துவதையும் நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். Chevron பற்றிய மேலதிக தகவல்களை www.chevron.com என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம். 

Chevron Lanka என்பது Chevron Corporation ஒரு இணைந்த நிறுவனமாகும். இந்தச் செய்தி வெளியீட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள Chevron மற்றும் நிறுவனம், கார்ப்பரேஷன், எமது, நாங்கள், எமக்கு போன்ற சொற்கள் Chevron கார்ப்பரேஷனை அல்லது அதன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணை நிறுவனங்களை அல்லது அவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக குறிக்கலாம். இந்தச் சொற்கள் அனைத்தும் வசதிக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனவே தவிர, தனித்தனியாகத் தனது சொந்த விவகாரங்களை நிர்வகிக்கும் ஒவ்வொரு நிறுவனத்தையும் துல்லியமாக விவரிப்பதற்காக அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்களுக்கான நியாயம் எப்போது கிடைக்கபோகிறது?

தமிழ் மக்களுக்கான நியாயம் எப்போது கிடைக்கபோகிறது?

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுமதி!

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுமதி!

குழந்தைகளின் அடிப்படை தேவை என்பது கல்வி!

குழந்தைகளின் அடிப்படை தேவை என்பது கல்வி!

சிங்கிமலைக் காட்டில் சிக்கிய நெதர்லாந்து மாணவி மீட்பு

சிங்கிமலைக் காட்டில் சிக்கிய நெதர்லாந்து மாணவி மீட்பு

பார்வை ஒரு தடையல்ல!

பார்வை ஒரு தடையல்ல!

ஹட்டனில் நவீன சுற்றுலா பஸ் சேவை அறிமுகம்

ஹட்டனில் நவீன சுற்றுலா பஸ் சேவை அறிமுகம்

ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

தேவாலய சிலுவைப் பாதை!

தேவாலய சிலுவைப் பாதை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

title