Header Logo

இந்தியா
முழு அதிகாரமில்லாத முதல்வர்!

Apr 8, 2026 - 02:10 PM -

0

முழு அதிகாரமில்லாத முதல்வர்!

நெல்லை கே.டி.சி நகரில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது, 

என் நெஞ்சில் குடியிருக்கும் திருநெல்வேலி மக்களுக்கு வணக்கம். முழு அதிகாரமில்லாத முதல்வராக மு.க.ஸ்டாலின் இருப்பதால் நெல்லையில் நிகழ்ச்சி நடத்த முடிந்திருக்கிறது. 

திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இரண்டும் வேறு வேறு என காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் ஒன்று தான்.திமுக, பாஜக இருவரின் நோக்கமும் ஒன்று தான், உங்களுக்காக குரல் கொடுக்கும் விஜய் வந்துவிடக்கூடாது என்பது தான். 

ஊழல் செய்ய முடியாத சூழல் உருவாகி உள்ளதால் என் மீது 2 கூட்டணியும் செம கோபத்தில் உள்ளனர். கல்லாப்பெட்டி கூட்டணி கலகலத்துபோய் உள்ளது. ஒட்டுப்போட்டு கூட்டணியை தக்க வைத்துக்கொண்டது திமுக. 

நேரடி கூட்டணிக்கும் மறைமுக கூட்டணிக்கும் நம்ம மேல காண்டு. அவங்க வீட்டிலேயே அவங்க குடும்பத்திலேயே விசில் சத்தம் பலமாக கேட்பதால் செம காண்டில் உள்ளனர். 

சில பல கோடிகளை கொடுத்து தமிழக காங்கிரசை தக்க வைத்து கொண்டாலும் உண்மையான காங்கிரஸ் நம்மிடம் தான் உள்ளது. 33 ஆண்டுகளாக ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஒவ்வொரு மனதிலும் நுழைய நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும். 

கட்சி ஆரம்பித்து ஒவ்வொரு குடும்பத்திற்குள் நான் நுழையவில்லை, அதற்கு முன்பே நான் நுழைந்துவிட்டேன். எனக்கு ஒன்னுன்னா மக்களுக்கும், மக்களுக்கு ஒன்னுன்னா எனக்கும் கண்ணு கலங்கும் என தெரிவித்தார்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title