Header Logo

செய்திகள்
ஈரானில் இணைய சேவை முடக்கம் தொடர்கிறது

Apr 8, 2026 - 04:22 PM -

0

ஈரானில் இணைய சேவை முடக்கம் தொடர்கிறது

ஈரானில் இணையச் சேவைகள் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முடக்கம் தற்போது 40-வது நாளை எட்டியுள்ளதாக இணைய கண்காணிப்பு குழுவான 'NetBlocks' தெரிவித்துள்ளது. 

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் தத்தமது வெற்றியைப் பிரகடனப்படுத்திக் கொண்டாலும், போர் காலத்தைப் போன்ற இக்கடுமையான தணிக்கை நடவடிக்கை தொடர்கிறது. 

ஈரான் மக்கள் மீண்டும் இருளில் தள்ளப்பட்டுள்ளனர் என NetBlocks குறிப்பிட்டுள்ளது. 

இணையச் சேவைகள் முழுமையாக முடக்கப்பட்ட போதிலும், ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணையம் மற்றும் இதர முறைகளைப் பயன்படுத்திச் சில மக்கள் இணையத்துடன் இணைந்திருக்க முயற்சிக்கின்றனர். 

எனினும், இதற்காக அவர்கள் பாரிய விலையைக் கொடுக்க வேண்டியுள்ளது. 

ஈரானில் ஸ்டார்லிங்க் சாதனத்தைப் பயன்படுத்துவது அல்லது வைத்திருப்பது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனைக்குரிய குற்றமாகும். 

இதனால் அந்நாட்டு அதிகாரிகள் அத்தகைய சாதனங்களைக் கண்டறியும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். 

அத்துடன், இது மிகவும் செலவுமிக்க ஒன்றாகக் காணப்படுகிறது. டெலிகிராம் செயலி ஊடாக ஸ்டார்லிங்க் இணையத் தரவுகள்1 ஜிபி சுமார் 6 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. 

சராசரி மாதச் சம்பளம் 200 முதல் 300 டொலர்களாகக் கணக்கிடப்படும் ஒரு நாட்டில், இது மிக அதிக விலையாகக் கருதப்படுகிறது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title