Apr 8, 2026 - 08:12 PM -
0
ஏப்ரல் மாதத்தில் 11% மின்கட்டணம் அதிகரிக்கப்பட்ட நிலையில், மீண்டுமொறு முறை 30% அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன் மூலம் ரூ. 41.5 பில்லியன் வருமானம் எதிர்பார்க்கப்படுகின்றன. இதில் பாதியான ரூ. 20.5 பில்லியன் தரம் குறைந்த நிலக்கரி மோசடியால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்ட பயன்படுத்தப்படும் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தரம் குறைந்த நிலக்கரியால் 250 கிகாவோட் மணி நேர மின்சாரம் இழக்கப்பட்டுள்ளன. இதை ஈடுசெய்ய டீசல் மின் நிலையங்கள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்வதற்கு ரூ. 20.5 பில்லியன் தேவைப்படுகின்றன.
இந்த நட்டத்தை நிறுவனங்களிடம் இருந்து அறவிடுவோம் என்று ஜனாதிபதி கூறியிருந்தாலும், உண்மையில் 75 இலட்சம் மின்சார பாவனையாளர்களே இதை செலுத்த வேண்டி காணப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.
நாட்டில் 61 இலட்சம் குடும்பங்களில் 25 இலட்சம் குடும்பங்கள் எரிவாயைப் பயன்படுத்தி வருகின்றன.
இவர்களுக்கு இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை. மே மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ள 30% மின்கட்டண அதிகரிப்பை மேற்கொள்ளும் தீர்மானத்தை உடனடியாக திரும்பப் பெறுங்கள்.
டீசல் அலகிற்கு ரூ. 100 வீதம் அறவிடும் திட்டத்தை கைவிட்டு, நட்டத்திற்கு காரணமான நிறுவனங்களிடமிருந்து அதை அறவிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
