Apr 9, 2026 - 08:18 AM -
0
ஈரான் போர் ஆரம்பமானது முதல் அமெரிக்கா கொண்டிருந்த "ஒவ்வொரு நோக்கமும்" வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள வெள்ளை மாளிகை, ஈரானிய கடற்படை அழிக்கப்பட்டுள்ளதாகவும், தெஹ்ரானின் பாதுகாப்பு தொழில்முறை அடித்தளம் முற்றாக துடைத்தெறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், ஈரானின் அணுசக்தி அபிலாஷைகளும் முறியடிக்கப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: "பிராந்தியத்திற்கு அச்சுறுத்தலாக விளங்குவதற்கு ஈரானுக்கு இருந்த திறன் முறையான மற்றும் முழுமையான முறையில் முறியடிக்கப்பட்டுள்ளது."
