Header Logo

செய்திகள்
அன்பளிப்பு வாங்கினால் ஆப்பு: பொலிஸ் நிலையங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!

Apr 9, 2026 - 08:34 AM -

0

அன்பளிப்பு வாங்கினால் ஆப்பு: பொலிஸ் நிலையங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!

அன்பளிப்புகளைப் பெற்றுக்கொள்ளாதிருத்தல் மற்றும் புத்தாண்டு உபசரிப்பு நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பில் பொலிஸ் மா அதிபரினால் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, பல பொலிஸ் நிலையங்களில் புத்தாண்டு உபசரிப்புகளை நடத்துவதற்காக உத்தியோகத்தர்களிடம் பணம் வசூலிக்கத் தயாராகி வருவதாகவும், வர்த்தக சமூகத்தின் பங்களிப்புடன் புத்தாண்டு விருந்துகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கிடைத்த தகவல்களைத் தொடர்ந்தே இந்த அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

விசேடமாக, சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில் வழங்கப்படும் அன்பளிப்புப் பொதிகள் மற்றும் பரிசு வவுச்சர்களை வழங்கக்கூடாது எனவும், சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் அத்தகைய பொருட்களைப் பொறுப்பேற்கக் கூடாது எனவும் பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.

அதேபோல், வெளித்தரப்பினர் அல்லது வர்த்தக சமூகத்தின் பங்களிப்புடன் பொலிஸ் நிலையங்களில் சிங்கள புத்தாண்டு விருந்துகளை நடத்தக்கூடாது என்றும் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் புத்தாண்டு உபசரிப்பு நடவடிக்கைகளுக்காக, ஒரு பொலிஸ் உத்தியோகத்தருக்கு 250 ரூபாய் வீதம் பொலிஸ் வெகுமதி நிதியத்திலிருந்து  வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவுறுத்தல்களை மீறிச் செயற்படும் உத்தியோகத்தர்களுக்கு எதிராகத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு மேற்பார்வை அதிகாரிகளுக்குப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் 17 பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு உட்பட்டு, பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களுக்கு அமைய இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

title