Header Logo

இந்தியா
கடலூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் திடீர் ரத்து!

Apr 9, 2026 - 09:51 AM -

0

கடலூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் திடீர் ரத்து!

தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடுகிறது. த.வெ.க. தலைவர் விஜய் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார். 

நேற்று (08) அவர் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் த.வெ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். 

இந்த நிலையில் இன்று (09) கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து கடலூர், வடலூர், சேத்தியாத்தோப்பு, ராமநத்தம் ஆகிய 4 இடங்களில் பிரசாரம் செய்ய இருந்தார். 

இதற்கு பொலிஸார், 21 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கினர். மேலும் த.வெ.க. தலைவர் விஜய் இன்று நடக்கும் பிரசாரத்திற்காக புதுச்சேரியில் இருந்து வீதி மார்க்கமாக கடலூர் வர இருந்தார். 

இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதாலும், விஜய் வருகையால் ஏதேனும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவும் கடலூர் மாவட்டத்தில் விஜய் பிரசாரம் திடீரென ரத்து செய்யப்படுவதாக கடலூர் மாவட்ட த.வெ.க. சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் வருகிற 11 ஆம் திகதி பிரசாரத்தை நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

பாராளுமன்றில் சரமாரியாக கேள்வி கேட்ட அர்ச்சுனா!

பாராளுமன்றில் சரமாரியாக கேள்வி கேட்ட அர்ச்சுனா!

இஸ்ரேல் தோல்வி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

இஸ்ரேல் தோல்வி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையாக எழுந்துள்ளது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையாக எழுந்துள்ளது!

title