Header Logo
Mogo Academy

விளையாட்டு
டெல்லியின் போராட்டம் வீண்!

Apr 9, 2026 - 10:08 AM -

0

டெல்லியின் போராட்டம் வீண்!
Mobitel inner

2026 ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் 14 ஆவது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 1 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. 

டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ஓட்டங்களை பெற்றது. 

துடுப்பாட்டத்தில் குஜராத் அணி சார்பில் அதிகபட்சமாக அணியின் தலைவர் சுப்மன் கில் 70 ஓட்டங்களை பெற்றார். 

பந்து வீச்சில் டெல்லி அணி சார்பில் முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளையும், நிகிடி மற்றும் குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 

211 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ஓட்டங்களையே பெற்றது. 

துடுப்பாட்டத்தில் டெல்லி அணி சார்பில் அதிகபட்சமாக கே.எல். ராகுல் 92 ஓட்டங்களை பெற்றார். அத்துடன் டெல்லி அணிக்காக விளையாடிய இலங்கை அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க அதிரடியாக விளையாடி 41 ஓட்டங்களை பெற்றார். 

பந்து வீச்சில் குஜராத் அணி சார்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 1 விக்கெட் வீழ்த்தினர்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara