Header Logo

செய்திகள்
யாரும் பார்த்திராத தாக்குதலை நடத்துவோம் - ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை!

Apr 9, 2026 - 10:33 AM -

0

யாரும் பார்த்திராத தாக்குதலை நடத்துவோம் - ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை!

ஈரானுடன் "உண்மையான உடன்படிக்கை" ஒன்று ஏற்பட்டு, அது முழுமையாகச் செயல்படுத்தப்படும் வரை அமெரிக்கப் படைகள் ஈரானைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

தனது 'Truth Social' சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: 

"ஏற்கனவே கணிசமான அளவில் பலவீனப்படுத்தப்பட்டுள்ள எதிரியை அழிப்பதற்குத் தேவையான அமெரிக்கக் கப்பல்கள், விமானங்கள் மற்றும் இராணுவ வீரர்கள் மட்டுமன்றி, மேலதிக வெடிபொருட்கள், ஆயுதங்கள் மற்றும் ஏனைய அனைத்து அபாயகரமான தளபாடங்களும் தயார் நிலையில் வைக்கப்படும்." 

இந்த உடன்படிக்கைகள் மீறப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என ட்ரம்ப் கூறினாலும், ஒருவேளை அவ்வாறு மீறப்படுமானால், "யாரும் இதுவரை பார்த்திராத மிகப்பெரிய மற்றும் வலிமையான முறையில் மீண்டும் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்படும்" என அவர் எச்சரித்துள்ளார். 

ஈரான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்பதிலும், ஹோமுஸ் நீரிணை திறந்த நிலையிலும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்பதிலும் நீண்ட காலத்திற்கு முன்பே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title