Header Logo

செய்திகள்
2 இலட்சத்திற்கும் அதிகமான சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் மூடல்

Apr 9, 2026 - 12:50 PM -

0

2 இலட்சத்திற்கும் அதிகமான சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் மூடல்

2018 முதல் 2022 வரையிலான காலப்பகுதியில், பல்வேறு காரணங்களினால் நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று (09) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு இலட்சத்து எட்டாயிரம்  நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஏனைய காரணங்களினால் மேலும் ஒரு இலட்சத்து ஐம்பத்தையாயிரம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக அனில் ஜயந்த மேலும் தெரிவித்தார்.

"நிறுவனங்களின் பட்டியல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தயாரிக்கப்படுகிறது. கடைசி தொகைமதிப்பு 2013 இல் நடத்தப்பட்டது. எவ்வாறாயினும், தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் 2018-2022 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, மொத்தமாக 1.3 மில்லியன் நிறுவனங்கள் உள்ளன. தற்போது 1,037,000 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. பொருளாதார நெருக்கடியால் மூடப்பட்டவை 108,000 ஆகும். பொருளாதார நெருக்கடி தவிர ஏனைய காரணங்களால் மூடப்பட்டவை 155,000 ஆகும்" என அவர் விளக்கமளித்தார்.

Comments
0

MOST READ

காணொளி
நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

title