Header Logo

செய்திகள்
ஹோமாகம மற்றும் பெலன்வத்தை பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு

Apr 9, 2026 - 01:16 PM -

0

ஹோமாகம மற்றும் பெலன்வத்தை பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு

நிலவும் வறட்சியான வானிலை காரணமாக இன்று (09) மற்றும் நாளை (10) ஹோமாகம மற்றும் பெலன்வத்தை பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, ஹோமாகம பகுதியில் இன்று (09) இரவு 8.00 மணி முதல் நாளை (10) காலை 8.00 மணி வரை நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

ஹோமாகம நகரம், வேகந்த வீதி, பின்கெத்த வீதி, வலவ்வ வீதி, கெமுணு மாவத்தை, அத்துருகிரிய வீதி, கலவிலவத்தை, நியந்தகல, மஹகடுவான, மாகம்மன, தெனிய மற்றும் தியகம பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளுக்கு இந்த நீர்வெட்டு அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

அதேபோல், பெலன்வத்தை, சித்தமுல்ல, எருவ்வல, நிவன்திடிய, போகுந்தர வீதி, ரத்மல்தெனிய, மஹரகம - பிலியந்தலை வீதி, மொரகெட்டிய வீதி, ஹிரிபிட்டிய, கொரகபிட்டிய வீதி, நியந்தகல வீதி - தொலேகடே சந்தி, குடமாதுவ முதல் 255 பஸ் வீதியின் வயல் வரை, புபுது மாவத்தை முதல் 255 பஸ் வீதியின் வயல் வரை ஆகிய பகுதிகளில் நாளை (10) காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

title