Header Logo

வடக்கு
கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

Apr 9, 2026 - 02:04 PM -

0

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

டித்வா சூறாவளியினால் சேதமடைந்திருந்த வடக்கு ரயில் மார்க்கம் புனரமைக்கப்பட்டு கொழும்பு, கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் இன்று (09) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

புனரமைப்பு பணிகளுக்காக ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. 

தற்காலிகமாக புனரமைக்கப்பட்டதன் பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் திகதி முதல் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், கொழும்பு - யாழ்ப்பாணத்திற்கிடையிலான ரயில்கள் குறைந்த வேகத்துடனேயே பயணித்தன. 

சேதமடைந்த பகுதிகளை முழுமையாக புனரமைப்பதற்காக வடக்கு ரயில் சேவைகள் மீண்டும் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. 

இந்திய அரசின் 05 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி பங்களிப்பில் இந்த மார்க்கத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 

புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து கொழும்பு கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் இன்று மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இன்று காலை 5.15 இற்கும் கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை நோக்கியும், பிற்பகல் 1.05 இற்கும் காங்கேசன்துறையில் இருந்து கல்கிசை நோக்கியும் பயணிக்கும் ரயில்களில் ஆசனங்களை முன்பதிவு செய்வதற்கும் தற்போது சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

--

Comments
0

MOST READ

காணொளி
அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

பாராளுமன்றில் சரமாரியாக கேள்வி கேட்ட அர்ச்சுனா!

பாராளுமன்றில் சரமாரியாக கேள்வி கேட்ட அர்ச்சுனா!

இஸ்ரேல் தோல்வி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

இஸ்ரேல் தோல்வி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையாக எழுந்துள்ளது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையாக எழுந்துள்ளது!

title