Apr 9, 2026 - 07:57 PM -
0
எதிர்வரும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக மாகும்பூர பல் போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து தற்போது மேலதிக பஸ் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, நேற்று (08) முதல் எதிர்வரும் 13ஆம் திகதி வரை ஒவ்வொரு நாளும் அதிகாலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை (இறுதிப் பயணி இருக்கும் வரை) போக்குவரத்துச் சேவைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் மாகும்பூர நிலையத்திற்கு வருவதற்கு முன்னதாக '0112-034474' என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து பஸ் நேர அட்டவணையை அறிந்துகொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
எனினும், பயணிகளின் வசதி கருதி முடிந்தவரை முன்கூட்டியே நிலையத்திற்கு வந்து சேவையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் மாகும்பூர பஸ் நிலைய உதவி முகாமையாளர் டி.எம். வெத்தசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.
கொழும்பிலிருந்து புறப்பட்டுச் சென்ற பஸ்கள் மீண்டும் திரும்பிய பின்னரே இரவு நேர சேவைகள் முன்னெடுக்கப்படும் என்பதால், இடையில் சில தாமதங்கள் ஏற்படக்கூடும்.
எனவே, அசௌகரியங்களைத் தவிர்க்க முன்கூட்டியே வருமாறு அவர் பயணிகளை வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை போக்குவரத்துச் சபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் மாகாண போக்குவரத்து அதிகாரசபை ஆகியன இணைந்து இந்த விசேட போக்குவரத்து சேவையை முன்னெடுத்துள்ளன.
