Apr 9, 2026 - 09:00 PM -
0
தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமையினால் சுமார் 100 பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையம் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர், இவ்வளவு பெரிய அளவிலான நஷ்டம் ஏற்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து, இன்று பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே டி.வி. சானக்க இதனைத் தெரிவித்தார்.
