Header Logo
Mogo Academy

விளையாட்டு
இந்தியாவின் மூத்த கிரிக்கெட் வீரர் காலமானார்!

Apr 10, 2026 - 11:37 AM -

0

இந்தியாவின் மூத்த கிரிக்கெட் வீரர் காலமானார்!
Mobitel inner

இந்தியாவின் மூத்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராகவும், உலக அளவில் 2 ஆவது சீனியர் வீரராகவும் விளங்கிய தமிழகத்தை சேர்ந்த சி.டி.கோபிநாத் (வயது 96) வயது மூப்பு பிரச்சினை காரணமாக சென்னையில் நேற்று (09) காலமானார். 

1951 முதல் 1960 ஆம் ஆண்டு வரை இந்திய டெஸ்ட் அணிக்காக 8 போட்டிகளில் ஆடிய அவர் ஒரு அரைசதம் உள்பட 242 ஓட்டங்களை எடுத்தார். 

முதல் தர கிரிக்கெட்டில் 83 ஆட்டங்களில் விளையாடி 9 சதம், 23 அரைசதம் உள்பட 4,259 ஓட்டங்களை சேர்த்தார். 1952 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா பெற்ற முதல் வெற்றி இது தான். அந்த வரலாற்று சிறப்புமிக்க இந்திய டெஸ்ட் அணியில் ஆடிய வீரர்களில் உயிரோடு இருந்த கடைசி வீரர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

கோபிநாத் மறைவுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. கோபிநாத் மரணத்தை தொடர்ந்து தற்போது இந்தியாவில் வாழும் அதிக வயது டெஸ்ட் வீரராக மும்பையைச் சேர்ந்த சந்திரகாந்த் பதான்கர் (வயது 95) உள்ளார்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara