Header Logo

செய்திகள்
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: மேலும் 763 பேர் கைது

Apr 10, 2026 - 01:56 PM -

0

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: மேலும்  763 பேர் கைது

குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ் நேற்று (09) மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 28,837 நபர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த சோதனைகளின் போது சந்தேகத்தின் பேரில் 763 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அவர்களில் குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 27 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். 

மேலும், இந்த நடவடிக்கையின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 240 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 165 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அத்துடன், மதுபோதையில் வாகனம் செலுத்திய 132 சாரதிகளும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 78 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அதேபோல், போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 4,579 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Comments
0

MOST READ

காணொளி
நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

title