Header Logo
Mogo Academy

விளையாட்டு
டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைத்த பிரேசில் வீராங்கனை!

Apr 10, 2026 - 02:41 PM -

0

டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைத்த பிரேசில் வீராங்கனை!
Mobitel inner

6 அணிகள் பங்கேற்றுள்ள பெண்களுக்கான ''கள ஹாரி 20 ஓவர்'' சர்வதேச கிரிக்கெட் தொடர் போட்ஸ்வானா நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று (09) இடம்பெற்ற ஆட்டத்தில் பிரேசில் - லெசோதோ அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய பிரேசில் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் டுக்கு 202 ஓட்டங்களை பெற்றது. 

அடுத்து களமிறங்கிய லெசோதோ அணி 6.2 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 13 ஓட்டங்களை பெற்று படுதோல்வி அடைந்தது. 7 வீராங்கனைகள் டக்-அவுட் ஆனார்கள். எக்ஸ்டிரா வகையிலும் 6 ஓட்டங்களை பெற்றார்கள். 

பிரேசில் வேகப்பந்து வீச்சாளர் 21 வயதான லாரா கார்டோசோ 3 ஓவர்களில் 2 மெய்டனுடன் 4 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றி புதிய சரித்திரம் படைத்தார். இதில் 'ஹாட்ரிக்" விக்கெட்டும் அடங்கும். 

ஒட்டு மொத்த சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் (ஆண்கள் போட்டியையும் சேர்த்து) 9 விக்கெட் வீழ்த்திய முதல் நபர் இவர் தான். 

இதற்கு முன்பு கடந்த ஆண்டு நடந்த ஆண்களுக்கான சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் மியான்மருக்கு எதிரான ஆட்டத்தில் பூட்டான் சுழற்பந்து வீச்சாளர் சோனம் யேஷி 8 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அதை லாரா கார் டோசோ முறியடித்துள்ளார்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara