Header Logo

செய்திகள்
பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு: முதற்கட்ட நேர்முகத் தேர்வு ஆரம்பம்

Apr 10, 2026 - 04:31 PM -

0

பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு: முதற்கட்ட நேர்முகத் தேர்வு ஆரம்பம்

இலங்கை பொலிஸ் திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை ஆகியவற்றில் நிலவும் ஆரம்பநிலை பொலிஸ் கான்ஸ்டபிள், பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி ஆகிய பதவிகளுக்கான புதிய ஆட்சேர்ப்பு தொடர்பான முதற்கட்ட நேர்முகத் தேர்வுகள் கடந்த 07-ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளன. 

இந்த நேர்முகத் தேர்வுகள் அடுத்த மாதம் 18-ஆம் திகதி வரை, பொலிஸ் மேலதிக படைத் தலைமையகத்தின் டொபிகின் விளையாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. 

நாடளாவிய ரீதியில் சுமார் 7,500 புதிய அதிகாரிகளை இந்தப் பதவிகளுக்காக இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அடுத்த மாதம் 08-ஆம் திகதிக்கு முன்னர் இணையத்தளம் (Online) ஊடாக சமர்ப்பிக்க முடியும். 

கடந்த 07-ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், பொலிஸ் சேவையில் இணைந்துகொள்ளும் ஆர்வத்துடன் நாட்டின் பல்வேறு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 5,000-க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளின் விண்ணப்பங்கள் பொலிஸ் ஆட்சேர்ப்புப் பிரிவுக்குக் கிடைத்துள்ளதாக இலங்கை பொலிஸ் மேலும் தெரிவித்துள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

title