Header Logo
Mogo Academy

விளையாட்டு
சிஎஸ்கே பிரச்சினையே இது தான்!

Apr 10, 2026 - 05:51 PM -

0

சிஎஸ்கே பிரச்சினையே இது தான்!
Mobitel inner

ஐபிஎல் 2026 சீசனில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைவர் ருதுராஜ் கெய்க்வாட், வேகப்பந்துவீச்சாளர் ஜேமி ஓவர்டனை தவறாக பயன்படுத்தியதாக முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் லட்சுமிபதி பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார். 

ஒரு நல்ல அணி தலைவர் தனது இரண்டாம் நிலை பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்படும்போது, அவர்களின் ஓவர்களை முடித்துவிடுவார். இது இறுதியில் 20 ஓட்டங்களை சேமிக்கும். ஓவர்டனைப் போல, இரண்டு ஓவர்களில் வெறும் 13 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்த ஒருவரை, பிறகு மீண்டும் அழைத்து 40 ஓட்டங்களை கொடுப்பதில் என்ன பயன்? 

அவர் நன்றாகப் பந்துவீசிக் கொண்டிருந்தபோதே, அவரது நான்கு ஓவர்களையும் முடித்திருக்க வேண்டும். டெத் ஓவர்களில் ஓவர்டன் நான்கு அல்லது ஐந்து விக்கெட்டுகளைத் எடுத்து ஆட்டத்தை வென்று தருவாரா?. 

ஓவர்டனை டெத் ஓவர்களில் பயன்படுத்தினால், ஆட்டமே அங்குதான் முடிந்துவிடும். முதல் துடுப்பாட்ட வரிசை முதல் பந்துவீச்சு, அணி தலைவர் உட்பட சிஎஸ்கேவுக்கு தற்போது அனைத்துத் துறைகளிலும் சிக்கல்கள் இருப்பது போல் உணர்கிறேன் என்று விமர்சித்தார்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara