Header Logo

செய்திகள்
மட்டக்களப்பு கடத்தல் சம்பவம் - சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Apr 10, 2026 - 10:29 PM -

0

மட்டக்களப்பு கடத்தல் சம்பவம் - சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதுடன், மற்றுமொரு பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை இன்று (10) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது, கடத்தல், கொள்ளை மற்றும் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களையும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த இரண்டு நகைக்கடை உரிமையாளர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி கட்டளையிட்டார். 

இன்றைய வழக்கு விசாரணையின்போது, சந்தேக நபர்களில் ஒருவர் மாத்திரமே நேரில் முன்னிலைப்படுத்தப்பட்டார். ஏனைய சந்தேக நபர்களிடம் நிகழ்நிலை (Online) ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. 

வழக்கின் மேலதிக விசாரணைகள் அனைத்தும் எதிர்வரும் 15ஆம் திகதி மீண்டும் நடைபெறவுள்ளதாக நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

--

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ

காணொளி
நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

title