Header Logo

செய்திகள்
கொழும்பில் 2 கோடி பெறுமதியான வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்

Apr 11, 2026 - 11:18 AM -

0

கொழும்பில் 2 கோடி பெறுமதியான வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்

கொழும்புப் பகுதியில் உள்ள பல விற்பனை நிலையங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட சோதனையின் போது, 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு மதுபானத் தொகுதியை மதுவரித் திணைக்களம் கைப்பற்றியுள்ளது. 

நம்பகமான தகவலின் அடிப்படையில், கொழும்புப் பிரதேசத்திலுள்ள பல விற்பனை நிலையங்களைக் குறிவைத்து மதுவரி விசேட சோதனை பிரிவால் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக மதுவரி ஆணையாளர் நாயகம் எம். பி. பிரேமரத்ன தெரிவித்தார். 

இந்தச் சோதனையில் 4 குழுக்களின் கீழ் சுமார் 30 அதிகாரிகள் பங்கேற்றதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

அரசாங்கத்திற்கு வரி செலுத்தாமல், பண்டிகைக் காலத்தை இலக்கு வைத்து விற்பனைக்காகத் தயார் செய்யப்பட்டிருந்த இந்த மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்கள் அனைத்தும் முற்றிலும் போலியானவை எனத் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பான விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மதுவரி ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். 

அத்துடன், இந்த மதுபானத் தொகுதி இலங்கைக்கு எப்படிக் கொண்டுவரப்பட்டது என்பது குறித்தும் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மதுவரி ஆணையாளர் நாயகம் எம். பி. பிரேமரத்ன மேலும் தெரிவித்தார்.

Comments
0

MOST READ

காணொளி
நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

title