Header Logo
Mogo Academy

விளையாட்டு
நான் பந்தையே பார்க்கிறேன்... பந்து வீச்சாளர்களை அல்ல - வைபவ் சூர்யவன்ஷி அதிரடி

Apr 11, 2026 - 01:09 PM -

0

நான் பந்தையே பார்க்கிறேன்... பந்து வீச்சாளர்களை அல்ல - வைபவ் சூர்யவன்ஷி அதிரடி
Mobitel inner

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 16வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் - ரோயல் ஜெலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ஓட்டங்களை பெற்றது. 

இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் 18 ஓவரில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து பெங்களூருவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. 

ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 26 பந்துகளில் 8 பவுண்டரிகள், 7 சிக்சர்களுடன் 78 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இந்த போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இதன்பின்னர் வைபவ் சூர்யவன்ஷி பேசியதாவது, 

நான் எவ்வாறு பயிற்சி செய்தேனோ அவ்வாறே ஆட்டத்திலும் செயல்படுத்த முயற்சித்தேன். எனது வழக்கமான ஆட்ட நடைமுறையை நம்பினேன். யார் பந்து வீசுகிறார்கள் என்பது உங்கள் மனதில் எப்போதும் இருக்கும். ஆனால், நான் பந்தை பார்க்கிறேன்... பந்து வீச்சாளர்களை அல்ல.’ என்றார்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara