Apr 11, 2026 - 05:53 PM -
0
2009 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமை குறித்து முறையான விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி செயலாளர் முறைப்பாடு செய்துள்ள நிலையில், லங்கா நிலக்கரி நிறுவனத்தின் காரியாலயத்திற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிலக்கரி இறக்குமதியில் பாரிய நிதி முறைகேடுகள் மற்றும் மோசடி இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வு அறிக்கைகள் மற்றும் பாராளுமன்றக் குழுக்களினால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு, முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி செயலாளர் இன்று (11) முற்பகல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்தார்.
