Header Logo

செய்திகள்
புதையல் தோண்டிய விசேட அதிரடிப்படை வீரர் உட்பட நால்வர் கைது

Apr 11, 2026 - 06:32 PM -

0

புதையல் தோண்டிய விசேட அதிரடிப்படை வீரர் உட்பட நால்வர் கைது

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய புல்லுமலை பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் உட்பட நால்வர் இன்று (11) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பூஜை பொருட்கள், புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் 6 கைபேசிகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, இன்று அதிகாலை 5.00 மணியளவில் கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் பெரிய புல்லுமலை பிரதேசத்தில் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இதன்போதே புதையல் தோண்டிக்கொண்டிருந்த நால்வர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட விசேட அதிரடிப்படை வீரர் வாழைச்சேனை முகாமில் கடமையாற்றுபவர் எனவும், தற்போது விசேட கடமை நிமித்தம் மகாஓயா முகாமில் இணைக்கப்பட்டுள்ள 36 வயதுடைய மொனராகலைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. ஏனைய மூவரும் முறையே உறுகாமம், தெஹியத்தக்கண்டி மற்றும் பெரிய புல்லுமலை பகுதிகளைச் சேர்ந்த 44, 48 மற்றும் 48 வயதுடையவர்களாவர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

title