Apr 11, 2026 - 06:40 PM -
0
நாட்டின் சில மாகாணங்களில் நிலவும் வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இன்று (11) பிற்பகல் 3.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிக்கை நாளை (12) ஆம் திகதிக்கும் செல்லுபடியாகும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பம் 'அவதானம் செலுத்த வேண்டிய' மட்டத்தில் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இது குறித்து அவதானத்துடன் செயற்பட்டு, மனித ஆரோக்கியத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
