Header Logo

செய்திகள்
யாழில் வாலிபர் தற்கொலை

Apr 11, 2026 - 11:43 PM -

0

யாழில் வாலிபர் தற்கொலை

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாகப் பலமுறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவர், ஐந்தாவது முறையாகத் தூக்கிட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். 

கோண்டாவில், சென் செபஸ்டியன் வீதியைச் சேர்ந்த மகேந்திரநாதன் பார்த்தீபன் (27 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். 

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: 

உயிரிழந்த இளைஞர் இதற்கு முன்னர் நான்கு தடவைகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்ய முயன்றபோது, உறவினர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். 

இந்நிலையில், நேற்று வேலை முடிந்து வீடு திரும்பிய அவர், இரவு உணவை உட்கொண்ட பின்னர் சுமார் 8.00 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். 

இரவு 10.00 மணி கடந்தும் அவர் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த அவரது சகோதரி அவரைத் தேடிச் சென்றுள்ளார். 

இதன்போது அவர் தூக்கிட்ட நிலையில் காணப்பட்டுள்ளார். உடனடியாக அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். 

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். 

உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

--

Comments
0

MOST READ

காணொளி
நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

title