Header Logo

செய்திகள்
7 பாதாள உலகக் குழுத் தலைவர்கள் வெலிசர சிறைக்கு இடமாற்றம்

Apr 12, 2026 - 06:44 AM -

0

  7 பாதாள உலகக் குழுத் தலைவர்கள் வெலிசர சிறைக்கு இடமாற்றம்

பூஸ்ஸ அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த முக்கிய ஏழு பாதாள உலகக் குழுத் தலைவர்கள் வெலிசர புதிய சிறைச்சாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.

நேற்று (11) குறித்த கைதிகள் வெலிசர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

இவ்வாறு இடமாற்றப்பட்டவர்களில் வெலே சுதா, தெமட்டகொட சமிந்த, லொகு பெட்டி, மிதிகம ருவன், பெக்கோ சமன், ஆர்மி சம்பத் மற்றும் மன்னா ரமேஷ் ஆகிய முக்கிய குற்றவாளிகள் உள்ளடங்குகின்றனர்.

பூஸ்ஸ சிறைச்சாலையில் இருந்தவாறு இவர்கள் பல்வேறு கடத்தல் மற்றும் குற்றச்செயல்களை வழிநடத்தியதாக கிடைத்த தகவல்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெலிசர கடற்படை முகாம் வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய சிறைச்சாலையானது விசேட பாதுகாப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளதுடன், அந்த சிறைச்சாலையின் முதலாவது கைதிகள் குழுவாக இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பூசா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த முக்கிய ஏழு பாதாள உலகக் கும்பல் தலைவர்கள் வெலிசர புதிய சிறைச்சாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.

நேற்று (11) குறித்த கைதிகள் வெலிசர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

இவ்வாறு இடமாற்றப்பட்டவர்களில் வெலே சுதா, தெமட்டகொட சமின்த, லொகு பெட்டி, மிதிகம ருவன், பெக்கோ சமன், ஆர்மி சம்பத் மற்றும் மன்னா ரமேஷ் ஆகிய முக்கிய குற்றவாளிகள் உள்ளடங்குகின்றனர்.

பூசா சிறைச்சாலையில் இருந்தவாறு இவர்கள் பல்வேறு கடத்தல் மற்றும் குற்றச்செயல்களை மெயெற்படுத்துவதாகக் கிடைத்த தகவல்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெலிசர கடற்படை முகாம் வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய சிறைச்சாலையானது விசேட பாதுகாப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளதுடன், அந்த சிறைச்சாலையின் முதலாவது கைதிகள் குழுவாக இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

title