Header Logo

செய்திகள்
யாழ் - தொல்புரத்தில் இளைஞர் அடித்து கொலை

Apr 13, 2026 - 08:24 AM -

0

யாழ் - தொல்புரத்தில் இளைஞர் அடித்து கொலை

யாழ்ப்பாணம் - தொல்புரத்தில் இரு இளைஞர் குழுக்கள் இடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்தார். 

நேற்று (12) இரவு 11 மணியளவில் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொல்புரம் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. 

ஒரே கிராமத்தினை சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கிடையே கடந்த சில ஆண்டுகளாக முரண்பாடு நிலவி வந்துள்ளது. 

இந்நிலையில் அங்குள்ள ஆலயம் ஒன்றின் நிர்மாணப்பணிகளின் போது, நேற்று மேலும் இரண்டு இளைஞர்களுடன் வந்த சந்தேகநபர் கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த சம்பவத்தில் காயமடைந்த 27 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், காயமடைந்த இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் தப்பிச் சென்றுள்ளனர். 

உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , சந்தேக நபரை இன்றைய தினம் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

--

Comments
0

MOST READ

காணொளி
நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

title