Header Logo

செய்திகள்
புத்தாண்டு விளையாட்டுகளுக்கான சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு

Apr 13, 2026 - 08:51 AM -

0

புத்தாண்டு விளையாட்டுகளுக்கான சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு

புத்தாண்டு காலத்தில் ஏற்பாடு செய்யப்படும் போட்டிகள் மற்றும் நிகழ்வுகளின் போது இடம்பெறும் விபத்துகளைக் குறைப்பதற்காக வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு சுகாதாரத் துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சுகாதார அமைச்சின் தொற்றாத நோய்கள் பிரிவினால் இந்த வழிகாட்டல் கோவை வெளியிடப்பட்டுள்ளது. 

இதில் விழாக்களை நடத்தும் போது பின்பற்ற வேண்டிய பொதுவான வழிமுறைகள் மற்றும் குறிப்பிட்ட சில விளையாட்டு நிகழ்வுகளுக்கான விசேட வழிகாட்டல்கள் விவரிக்கப்பட்டுள்ளன. 

குறுந்தூர ஓட்டம் , மரத்தன் போட்டிகள் மற்றும் சைக்கிள் ஓட்டப் பந்தயம் போன்ற நீண்ட நேரம் நடைபெறும் போட்டிகளில் பங்குபற்றுபவர்கள், போட்டிக்கு குறைந்தது 6 வாரங்களுக்கு முன்னதாகவே பயிற்சியைத் தொடங்க வேண்டும். 

அத்துடன் ஒரு பயிற்றுவிப்பாளரின் கீழ் பயிற்சி பெறுவது மிகவும் பொருத்தமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

விழா நடைபெறும் இடத்தில் சகல வசதிகளுடனும் கூடிய முதலுதவி மத்திய நிலையம் ஒன்றையும், தேவையான மருத்துவ உபகரணங்களுடன் கூடிய மருத்துவ வசதிகளையும் உறுதிப்படுத்துவது அவசியமாகும். 

எனவே, புத்தாண்டு விழாக்களை ஏற்பாடு செய்யும் போது இந்த வழிகாட்டல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு சுகாதாரத் துறையினர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். 

முழுமையான வழிகாட்டல் கோவை மும்மொழிகளிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

Comments
0

MOST READ

காணொளி
நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

title